ஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்.
ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது மற்றுமொரு விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில் தீப்பிடித்த விமானத்தில் பயணித்த 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 கடலோர காவல்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு கடலோர காவல்படை தளபதி உட்பட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் 17 பயணிகளுகம் காயமடைந்துள்ளனர்.