உள்நாடு

கிராம உத்தியோகத்தர்கள் சட்டப்படி வேலை.

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கப்படாத போக்குவரத்து கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, தொடர்பாடல் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *