நைஜீரியாவில் தொடர் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி!
நைஜீரியாவில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான போர்னோவில் திருமண விழா, இறுதி சடங்கு மற்றும் மருத்துவமனையை குறிவைத்து இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
போகோ ஹராம் தீவிரவாதக் குழு கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இதன் விளைவாக 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.