மலையகத்துக்கான ரயில் சேவைகள் வழமைக்கு..
இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்க பராமரிப்பு பிரிவின் ஊழியர்களினால் தடம் புரண்ட ரயிலின் இயந்திரம் மீண்டும் தடமேற்றப்பட்டதை அடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டமையினால் இன்று (30) அதிகாலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.