உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் கட்டணம்!

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பஸ் கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.

தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி பஸ் கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *