பியூமி ஹன்சமாலி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு.
பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்