இனிமேல் நான் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ நான் போட்டியிட மாட்டேன் ; மைத்ரிபால சிறிசேன.
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.