சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் – மக்கள் ஏமாற வேண்டாம்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 2024ம் ஆண்டு ஜூலைமாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டது என தெரியப்படுத்தும் வகையில் ஆங்கில மொழியில் குறித்த ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் உட்பட அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை எனவும் இலங்கை பொலிஸினால் அல்லது அதற்கு இணையான நிறுவனமொன்றினால் இதுபோன்று எந்தவொரு ஆவணமும் வெளியிடப்படவில்லையென பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.