லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!
ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3680 ரூபாவிற்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1477 ரூபாவிற்கும் 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலை, 02 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 591 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபாவாகும்.