வரலாற்றில் முதன்முறையாக இராணுவத் தளபதியாக பெண் ஒருவர் நியமனம்!
கனடாவில் முதன்முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் இராணுவ அதிகாரியாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.
வெய்ன் அர் ஓய்வை அறிவித்த நிலையில் புதிய இராணுவத் தளபதியாக ஜென்னி கரிக்னன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜூலை 18ஆம் திகதி பாதுகாப்பு ஊழியர்களின் தலைமைப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கனடா நாட்டின் வரலாற்றில் ஒரு பெண் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.