TIN இலக்கத்தை பெற்றாலும் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியும்!
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுள்ளவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்த கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தாலும், அவர்களின் மாத வருமானம் 100,000 ரூபாயை தாண்டவில்லை என்றால் அது தொடர்பாக ஒரு கடிதம் மூலமாக அறிவிப்பதன் மூலம் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியுமேன நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசிய இறைவரி திணைகளத்தின் அருகிலுள்ள கிளை அலுவலகத்துக்குத் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.
இதுவரை 23 லட்சம் பேர் TIN எண்னை பெற்றுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் 13 இலட்சம் பேர் அந்த எண்னை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜூலை மாத இறுதிக்குள் டின் எண்கள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை 73 இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.