வாசக உலகில்……
முதல் பத்து நூல்களை வாசிக்கையில்
உலகில் நீங்கள் தான் மிகப் பெரும் ஆளுமை என்று உணர்வீர்கள். எந்த மாமேதையையும்
தத்துவ ஞானியையும் எதிர்க்கலாம், எதிர்கொள்ளலாம் என்றுணர்வீர்கள்
50 நூல்களை வாசித்து முடித்த பிறகு
வாசிப்புக்காக
நாளாந்த ஒழுங்கொன்றை நேசித்து பின்பற்றுவீர்கள்.
ஒரு கோப்பிக் கோப்பையை அருகில் வைத்து நேசிப்பீர்கள்.
கோப்பிக்கடைகளில், சிற்றுண்டிச்சாலைகளில்
நீண்ட நேர தனிமையை ஏகாந்தத்தை
நேசிப்பீர்கள்.
சாளரமருகே அமர்ந்து பொதுப் போக்குவரத்து
சாதனங்களுக்கூடாக உற்று நோக்குவதை விரும்புவீர்கள்.
நூறு புத்தகங்களை வாசித்த பிறகு
ஸீரியஸான நூல்களையும்
கீழ்த்தரமான நூல்களையும்
வேறு பிரித்தறிவீர்கள்.
கூர்ந்து அவதானிப்பவற்றை
குறிப்பெடிக்க
ஒரு பேனையை,
குறிப்பேட்டை வைத்துக்கொள்வீர்கள்.
ஒரு தோற்பையை,
மருத்துவ மூக்குக் கண்ணாடியை
வாங்கிக்கொள்வீர்கள்.
மிகவும் நிதானமடைந்தவராக
மாறுவீர்கள்.
250 நூல்களை வாசித்த பிறகு
அனேகமாக மனிதர்களை விட்டும் தனித்து ஒதுங்கி இருக்க விரும்புவீர்கள்.
சைக்கிள் வண்டியின் அழைப்பொலி கூட உங்களுக்கு தொந்தரவாகாது.
உங்களுக்கான பிரத்தியேக உலகில் மூழ்கிப்போவீர்கள்.
இடைஞ்சலான
நிகழ்ச்சிகள் கூட உங்களை எதுவும் செய்யாது.
பித்து பித்துப்பிடித்தலைபவன்
தன்னையொத்த ஒருவனை தேடித்தவிப்பது போல அலைவீர்கள்.
350 நூல்களை கடக்கையில்
இவ்வளவு காலம் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளேன் என்றுணர்வீர்கள்.
அதைவிட பேதையாக உள்ளதாக உணர்வீர்கள்.
மிகக்குறைவானவற்றையை
அறிந்துள்ளீர்களென்று உணர்வீர்கள்.
500 புத்தகங்களை தாண்டியதும்
எழுத நினைத்து எழுத ஆரம்பிப்பீர்கள்…..
மொழிபெயர்ப்பு
M.M.A.BISTHAMY