விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு!
நாளை முதல் 16 வரை நடைபெற உள்ள போஹ்ரா மாநாட்டுடன் இணைந்து சிறப்பு போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளது.
இந்த மாநாடு பம்பலப்பிட்டி போஹ்ரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு காலி வீதி, கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவிற்குள் நுழையும் பல வீதிகள் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, பிற்பகல் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையும் வீதிகள் மூடப்படும்.
அதேநேரம் அன்றைய தினம் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வீதிகள் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் மாநாடு நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 15,000 போஹ்ரா சமூகத்தினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.