பயறு, கிழங்கு, சீனி விலைகள் குறைப்பு !
உடன் அமுலாகும் வகையில், சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும்,
சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும்,
வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது