பெருந்தோட்டத் துறையில் புதிய குடியிருப்பு கிராமங்கள்.
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போதுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் கிராமிய மட்ட சேவைகள் முறையாக கிடைக்காமையால், அவர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடாத்துவதற்காக பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக மாற்ற வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயன் அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.