ரிஷாட் எம் பி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்பி பயணித்த கார் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
திடீரென வீதிக்கு வந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் காரின் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோதே கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.