வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தத் தகவலை வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி எதிர்கால இளைய தலைமுறைகளும் எம்மைப் போல் அவலநிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்விச் சீர்திருத்தத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.