துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியது கடவுளின் செயல் : ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்றைய தினம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பை முன்மொழியும் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ட்ரம்ப் விஸ்கான்சின் புறப்பட்டுள்ளார்.
அப்போது அவர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் கடவுளின் செயலாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ நான் காப்பாற்றப்பட்டேன். நான் தற்போது இங்கு இருந்திருக்கமாட்டேன். நான் உயிரிழந்திருப்பேன். மிகவும் நம்பமுடியாத அனுபவம் போன்று உள்ளது. இதுபோன்ற சம்பவத்தை தான் பார்த்ததில்லை என்றும் இது ஒரு ஆச்சரியம் என்றும் எனக்கு சிகிச்சையளித்த வைத்தியர் கூறினார்.
இது அதிஷ்டமோ அல்லது கடவுளின் செயலோ எனக்கு தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் இதை கடவுளின் செயல் என்று கூறுகின்றனர் என அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.