உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!
மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில், உடன் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.
பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.