ஓமன் அருகே மூழ்கிய எண்ணெய் கப்பல் – இலங்கையர்கள் உட்பட 13 இந்தியர்கள் மாயம்.
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று பயணிகளுடன் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன் படி, அந்த கப்பலில் பணியாற்றிய 16 பேர் கடலில் மாயமாகியுள்ளனர்.
இதேவேளை, அவர்களில் 13 பேர் இந்தியர்கள் என்றும் மற்றைய மூவர் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓமான் அதிகாரிகள் கடல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஓமானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.