உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கை!
எரிபொருள், சமையல் எரிவாயு விலை மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை அடையாளங்காணும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியிலுள்ள உணவகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் தொடர்ச்சியாக சோதனைக்குட்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் துஷித இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை காட்சிப்படுத்தாமல் இருப்பது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.