செயலிழந்த மைக்ரோசொப்ட்!உலகம் முழுவதும் நீலநிற மயமான விண்டோஸ்!
Crowd Strike செயலிழப்பு காரணமாக உலகம் முழுவதும் இணையத்தள செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக, பல நாடுகளில் விமான சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
விமான சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன. லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.