முட்டை உற்பத்தி மூலம் ரூ.25 இலாபமீட்டும் உற்பத்தியாளர்கள்.
முட்டை ஒன்றின் மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபா நியாயமற்ற இலாபத்தினை பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவிடப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பண்ணைகளில் இருந்து மொத்த வியாபாரிகளுக்கு 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டை விநியோகிப்பதால் தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.