ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிக்கை!
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய முன்பதிவு சேவைகளை பாதிக்கும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களின் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (19) விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி 14:00 மணியளவில், தொழில்நுட்ப கோளாறு முழுமையாக மீளமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக உதவிகளுக்கு, தயவு செய்து தங்கள் உலகளாவிய தொடர்பு மையத்தை +94 19733 1979 தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கோரியுள்ளது.