எயிட்ஸ் எச்சரிக்கை – 40 குழந்தைகள் அடையாளம்.
கடந்த ஆண்டு எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் 3,169 வயோதிபர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகமாகுமென தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இள வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.