கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரிப்பு!
கடந்த 10 வருட காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹோர்மோன் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உதித புலுகஹபிட்டிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இனிப்பு கலந்த உணவுகளை அதிகம் உண்பதனால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயிலிருந்து எம்மை காத்துக்கொள்ளத் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு கலந்த உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்கள் ஆகிய உணவுகளை உண்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.