ரயில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹட்டன் புகையிரத நிலையத்தில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இதற்குப் பிறகு ரயில் வேலைநிறுத்தம் இல்லை. புகையிரத சேவை அத்தியாவசிய சேவை என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் கலந்துரையாட வேண்டும்.
இல்லையேல் மக்கள் பாதிக்கப்படும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலையை கைவிட்டது போல் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
நாம் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும், இல்லையெனில் நாம் பொது சேவை செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.