அசங்க அபேகுணசேகர கைது.
தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (21) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.