எல்.பி.எல் இறுதிப் போட்டியை காண வரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள எல்.பி.எல் இறுதிப் போட்டி குறித்து ஏற்பாட்டுக் குழு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மைதான வாயில்கள் மாலை 5:30 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மைதானத்திற்கு வரும் போது டெம்பல் வீதி, மாளிகாவத்தை வீதிகள் மூடப்படும் என்றும் இதன்போது டொக்டர் பபாபுள்ளே வீதியைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மார்வெல்ஸ் மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்தோடு மைதானத்திற்கு வரும் வாகனங்கள் ஆப்பிள் வாட்டா கார் பார்க் மற்றும் ஸ்ரீ சதர்மா மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது