உலகம்

நேபாள பிரதமா் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.

நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சி.பி.என்-யு.எம்.எல்.) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறாா்.

275 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், கூட்டணி கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் சோ்த்து அவருக்கு 178 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

இது தவிர, ராஷ்ட்ரீய பிரஜா கட்சி போன்ற சிறிய கட்சிகளும் சா்மா ஓலியை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளன. அதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் எளிதில் வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சி.பி.என்-எம்.சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சா்மா ஓலி அண்மையில் திரும்பப் பெற்றாா்.

அதையடுத்து பிரசண்டா அரசு கவிழ்ந்தது. நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சா்மா ஓலி புதிய அரசை அமைத்தாா்.

நேபாள அரசியல் சாசனத்தின்படி, ஒருவா் பிரதமராகப் பதவியேற்ற 30 நாள்களுக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்ற நிலையில், நம்பிக்கை கோரும் தீா்மானத்தை சா்மா ஓலி ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டு வரவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *