உள்நாடு

இரகசியத்தை கக்க ‘டெட்டூ’ துலானுக்கு அனுமதி.

அத்துருகிரிய பச்சை (டெட்டூ) குத்தும் மையத்தில் வைத்து கொல்லப்பட்ட ‘கிளப் வசந்த’ என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய் இன்று (22) நீதிமன்றில் இரகசியம் ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.

சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக நீதிமன்றில் அறிவித்தார்.

அங்கு நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார, சந்தேக நபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகளை தெரிவித்ததுடன், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க இணங்கினால், பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி இன்று (22) நீதிமன்ற பகல் இடைவேளையின் பின்னர் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *