ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள் பலருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து கொண்டு, தங்கள் சொந்த நாடான பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்தது தொடர்பில்,
கைதான பல பங்களாதேஷ் பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது, இதில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் உள்ளடங்கும்
அபுதாபி ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை 53 பங்களாதேஷ் பிரஜைகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மற்றொரு பங்களாதேஷ் நாட்டவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது,
மேலும் மூன்று ஆயுள் சிறைத்தண்டனைகளுடன், அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது. சிறைத்தண்டனையை முடிந்த காலத்தில் அவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வங்கதேசத்திற்கு அவர்களை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல தெருக்களில் பிரதிவாதிகள் கூடி பெரிய அளவிலான அணிவகுப்புகளை ஏற்பாடு செய்ததை உறுதிப்படுத்திய ஒரு சாட்சியை நீதிமன்றம் செவிமடுத்துள்ளது.
சனிக்கிழமையன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகள் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் மீதான விசாரணை மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.