சாமிது விக்கிரமசிங்கவுக்கும் வாய்ப்பு!இலங்கை கிரிக்கெட் அணியினால் அறிவிக்கப்பட்டது .
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை அறிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த அணி விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவின் அங்கீகாரம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முறை LPL போட்டியில் முன்னேறிய வீரராக திறமைகளை வெளிப்படுத்திய சாமிது விக்கிரமசிங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை விசேஷமாகும்.
அதன்படி, அணியின் தலைவராக சரித் அசலங்க பொறுப்பேற்கின்றார்.
அணியினைச் சேர்ந்த வீரர்கள்:
- சரித் அசலங்க (தலைவர்)
- பத்தும் நிஸ்ஸங்க
- குசல் மென்டிஸ்
- குசல் ஜனித் பெரேரா
- கமிந்து மென்டிஸ்
- தசுன் ஷானக
- வனிந்து ஹசரங்க
- மஹீஷ் தீட்சன
- மதீஷ பதிரண
- நுவன் துசர
- துனித் வெல்லலாகே
- துஷ்மந்த சாமீரா
- பினுர பெர்னான்டோ
- தினேஷ் சந்திமால்
- அவிஷ்க பெர்னான்டோ
- சாமிது விக்கிரமசிங்க
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக நேற்று (22) இலங்கைக்கு வந்துள்ளது.
முதலில் 3 இருபதுக்கு 20 போட்டிகள் வரவிருக்கும் 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
பின்னர், ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் கொழும்பு கெத்தாரம சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளன.