பிக்குணிகளுக்கு புலமைப் பரிசில்.
3000 பிக்குணிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படும் பிரிவேனா மற்றும் பிக்குணி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.
இதுவரை காலமும் பிரிவேன்களில் கற்கும் பிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்பதோடு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த புலமைப்பரிசில் திட்டம் செயற்படுத்தப்படுவது விசேட அம்சமாகும்.