பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவு!
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து அது இடம்பெற்றது.
உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் வலுவான வழக்கை உறுதி செய்வதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.