வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!
உற்பத்தி செய்து ஏழு வருடங்களான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தால், தற்போதைய சந்தை விலையை விட 60-70 வீதத்திற்கு இடைப்பட்ட குறைந்த விலையில் வாகனத்தை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்தார்.