விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் – கல்வி அமைச்சர்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
மேலும், உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைகளை முன்னதாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சை கால அட்டவணையை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சாதாரண தர, உயர் தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அண்மைய க.பொ.த சா/த பரீட்சைக்கு பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட உயர்தர வகுப்புகளுக்கான கற்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.