தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டோர் கவனத்திற்கு.
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், சாரதி உரிம அட்டைகளுக்கு தேவையான அட்டைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இந்த சிக்கலால் கிட்டத்தட்ட 8 லட்சம் சாரதி உரிமங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
தற்போது தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காக ஆண்டுக்கு 9 முதல் 10 லட்சம் சாரதி உரிமங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.