பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு : 13 பேர் பலி!
தெற்கு சீன கடலில் ‘கெமி’ புயல் வலுப்பெற்ற நிலையில் கிழக்கு தாய்வானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸின் அருகேயுள்ள கடலில் மையம் கொண்டுள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் பேரிடர் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில், தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.