ஜனாதிபதி தேர்தல் – பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள், குடிமக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று (26) பாராளுமன்றத்தில் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று பாராளுமன்றத்தில் கூடிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.