புதிய தலைமைகளுடன் ஆரம்பமாகும் டி 20 தொடர்: இலங்கை – இந்தியா பலப்பரீட்சை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான டி 20 போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
புதிய தலைவர்களை கொண்டு களமிறங்கவுள்ள இரு அணிகளுக்கும் புதிய பயிற்றுவிப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டி தொடர் எதிர்பார்ப்பு மிக்கதாக அமைந்துள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு20 போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணி
குறித்த தொடரில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, நுவன் துஷார, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, சமிந்து விக்கிரமசிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி சார்பில், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், கலில் அகமது, ரவிபிஷ்னோய் உள்வாங்கப்பட்டுள்ளனர்.