சுவிஸில் 375,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்.
சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள கோவில் ஒன்றில் இலங்கை ரூபா மதிப்பின் படி 375,000 இற்கு மாம்பழம் ஒன்று விற்கப்பட்டுள்ளது.
விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமானது, கோவில் வளர்ச்சி நிதிக்காக ஆலய நிர்வாகத்தினரால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோவிலில் பக்தர்களுக்கிடையே இடம்பெற்ற ஏல விற்பனை மூலம் இந்த மாம்பழம் 375,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.