சகல அமைச்சு பொறுப்புகளிலிருந்தும் விலகினார் விஜயதாச ராஜபக்ஷ!
தாம் வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை விஜயதாச ராஜபக்ஷ விகித்து வந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில் இந்த பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.