நாட்டில் இதுவரையில் 32 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 32,183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 12,786 ஆகும்.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 7,582 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3,452 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், வட மாகாணத்தில் 4,589 டெங்கு நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 3,329 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.