ஹபராதுவயில் துப்பாக்கி பிரயோகம் l இருவர் காயம்.
ஹருமல்கொட பகுதியிலுள்ள வாடிவீட்டிற்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த ஒருவரை இலக்கு வைத்துத் துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் முதலில் காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் ஏற்ற முயற்சித்த வேளையில், மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதியும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். எனினும், காயத்தையும் பொருட்படுத்தாது, சாரதி, முச்சக்கரவண்டியை வைத்தியசாலை நோக்கி செலுத்தியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 மற்றும் 54 வயதான இருவர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.