கெஹலியவின் பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி.
தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட ஆறு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.