பொலிஸ் மா அதிபர் விவகாரம் ; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்.
பொலிஸ் மா அதிபராக செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதன்படி தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபராக செயற்படல், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், கடமைகளை முன்னெடுத்தல் ஆகியன தடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை,தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சேவை இடமாற்றல் பணிகளை முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.