16 வருடங்களுக்கு பின் ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்ற அமெரிக்க அணி.
நேற்று, திங்கற்கிழமையன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் , ஆஷர் ஹாங், பால் ஜூடா, ப்ரோடி மலோன், ஸ்டீபன் நெடோரோஸ்கிக் மற்றும் ஃபிரடெரிக் ரிச்சர்ட் அடங்கிய அமெரிக்க அணி 16 வருடங்களுக்கு பின் வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
மேலும், இப்போட்டியில் ஜப்பானிய அணி தங்க பதக்கத்தையும் சீன அணி வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.