எதிர்வரும் புதன்கிழமை மொட்டுக் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய ஒரே நபருமான தம்மிக்க பெரேரா மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என உதயங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி ஆப்பம் சாப்பிட்டு சென்றது போல் இல்லாமல் பசில் ராஜபக்ச ரணிலை வெற்றிக்கொள்வார் என கூறியுள்ளார்.
அதனுடன் நின்று விடாது தம்மிக்க பெரேராவை தேர்தலில் களம் இறக்கி அவரை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தும் வரையில் பசில் ராஜபக்ச தனது நகர்வில் இருந்து வெளியேரமாட்டார் எனவும் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவார் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.