உலகம்

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்.

டிக்டொக்கின் (TikTok) தாய் நிறுவனமான ‘ByteDance’ இன் சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், உணவு நச்சுத்தன்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில், நேற்று (30.07.2024) செவ்வாயன்று 60 பேர் வரை இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டமை குறித்து, சிங்கப்பூரின் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், பைட் டான்ஸ், தனது ஊழியர்கள், நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது.

பைட் டான்ஸ் அலுவலகங்களில் எந்த உணவும் தயாரிக்கப்படுவதில்லை. எனினும், உணவு வழங்குவதற்கு மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எனவே, இதற்கு உணவு நஞ்சாதல் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன தொழில் முனைவோரால் 2012இல், சிங்கப்பூர் அலுவலகம் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *